×

சொத்து பிரச்னை காரணமாக குடிநீர் தொட்டியில் மனிதகழிவு கலப்பு

விருத்தாசலம், ஜன. 31: சொத்து பிரச்னை காரணமாக குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்ததாக வந்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகராட்சிக்கு உட்பட்ட குட்டைக்கார தெருவை சேர்ந்தவர் வெங்கடேஷ்(49). இவரது அண்ணன் சங்கர். சங்கர் இறந்து விட்டார். இவரது மனைவி மகாலட்சுமி (54). இவர்கள் ஒரே காம்பவுண்டில் வசித்து வரும் நிலையில் இவர்களுக்குள் இட பிரச்னை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த 27ம் தேதி மீண்டும் இவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து 28ம் தேதி வெங்கடேஷ் வசிக்கும் வீட்டின் குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்த போது தண்ணீரில் துர்நாற்றம் வீசி உள்ளதாக தெரிகிறது. இதனால் சந்தேகம் அடைந்த வெங்கடேஷ் குடும்பத்தினர் வீட்டிற்கு மேல் தளத்தில் இருந்த குடிநீர் தொட்டிக்கு சென்று பார்த்த போது குடிநீர் தொட்டியில் வெள்ளை நிற பனியன் துணியில் மனித கழிவை யாரோ சுற்றி தண்ணீரில் போட்டுள்ளதாக தெரிகிறது.

அதிர்ச்சி அடைந்த வெங்கடேஷ், விருத்தாசலம் காவல் நிலையத்தில் தனது அண்ணன் மனைவி மகாலட்சுமி தன்னுடைய வீட்டு குடிநீர் தொட்டியில் மனித கழிவை கலந்ததாக கொடுத்த புகாரின் பேரில் மகாலட்சுமி மீது விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சொத்து பிரச்னை காரணமாக குடிநீர் தொட்டியில் மனிதகழிவு கலப்பு appeared first on Dinakaran.

Tags : Vridthachalam ,Venkatesh ,Kuttaikara Street ,Vriddhachalam Municipality ,Cuddalore District ,Shankar ,Dinakaran ,
× RELATED விருத்தாசலம் அருகே ரயிலில் இருந்து...